இலங்கைக்கு ஐ.நா-இந்தியா ஆதரவு: புலிகள்
கொழும்பு: இலங்கை நடத்தி வரும் போருக்கு ஐ.நா, இந்தியா மற்றும் சர்வதேச சமுதாயம் மறைமுக ஆதரவு தந்து வருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழர்களை வெளியேற விடாமல் நாங்கள் தடுப்பதாகவும், இப்போதைக்கு போரை நிறுத்த முடியாது என ஐ.நா. மனித உரிமைப் பிரிவின் தலைவர் ஜான் ஹோல்ம்ஸ் கூறியுள்ளார். இதையே தான் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளும் கூறியுள்ளன.
இதன்மூலம் பாதுகாப்பு வளையம் என்று சொல்லப்படக் கூடிய இடத்திலேயே ராணுவம் தமிழர்களை கொன்று குவித்து வருவதை ஐ.நாவும், இந்தியாவும் உலக நாடுகளும் தடுக்க முயலவில்லை.
புலிகளின் ஆயுதப் போராட்டம் என்பது அடக்குமுறையாக எதிராக கிளம்பிய போராட்டம். தமிழ் இனத்துக்கு உரிய உரிமைகள் கிடைத்தால் ஆயுதங்களை கைவிட புலிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட்டால் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என்று கூறப்பட்டுள்ளது.
பிரபாகரனை 'மீ்ட்க' ஐ.நா. முயற்சியாம்..
இந் நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் அந்த அமைப்பின் பிற தலைவர்களையும் ஐ.நா. சபையின் முன்பு சரணடைய வைத்து அவர்களை பத்திரமாக வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று காப்பாற்றும் முயற்சியில் ஐ.நா. இறங்கியிருக்கிறது. விஜய் நம்பியாரின் வருகைக்கு அதுவே காரணம் என இலங்கையின் தேசிய ஐக்கிய முன்னணி கட்சித் தலைவர் விமல் வீர வன்ச கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
விடுதலைப் புலிகளின் தலைவர்களை ஐ.நா. சபையின் மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கான திட்டம் ஒன்று உள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்காவின் தூதுவர் ராபர்ட் பிளேக் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றார்.
இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்காகவே ஐ.நா.வின் உயர் அதிகாரியான விஜய் நம்பியார் கொழும்பு வந்திருக்கின்றார்.
இலங்கை படையினரிடம் விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சரணடையச் செய்வதைத் தவித்து ஐ.நா.விடம் இவர்களைச் சரணடையச் செய்து வெளிநாடுகளுக்கு அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பதே இந்தத் திட்டமாகும்.
ஐ.நா., அமெரிக்கா உட்பட பல நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கி வந்த ஆதரவு - அதன் தலைவர்கள் ராணுவத்திடம் சரணடைந்தால் வெளியே தெரிய வந்துவிடும் என்பதால் அதனை மறைப்பதற்காகவும் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சதித்திட்டத்தை தோல்வியடையச் செய்வதற்கு நாம் விழிப்புடன் செயற்பட வேண்டும். அதிபரும், அரசாங்கமும் இதுவரை செயற்பட்டதைப் போல இனியும் அனைத்துலக அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இந்த விஷயத்தில் செயற்படுவது அவசியம்.
மேலும், நீண்டகால போர் நிறுத்தத்துக்காக குரல் கொடுக்கும் நாடுகளின் குரலுக்கும் அரசு பணிந்து விடக் கூடாது என்று கூறியுள்ளார் விமல் வீர வன்ச.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications