அடுத்த 15 ஆண்டுகளில் சென்செக்ஸ் 1 லட்சம் புள்ளிகளைத் தொடும்!
டெல்லி: வரும் 2025-ம் ஆண்டு இந்திய பங்குச் சந்தைக் குறியீட்டெண் சென்செக்ஸ் 1,00,000 புள்ளிகளை எட்டிவிடும் என்று அமெரிக்காவின் எலியட் வேவ் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.
சென்செக்ஸின் முந்தைய போக்கு, நடப்பு நிலை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இந்த புள்ளிவிவரக் கணக்கை தயாரித்து வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம்.
கடந்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி சென்செக்ஸ் 21000 புள்ளிகளைத் தொட்டிருந்தது. ஆனால் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த அக்டோபரில் 8000 புள்ளிகளுக்கும் கீழே இறங்கிவிட்டிருந்தது.
இப்போது மீண்டும் 10 நாட்களில் 2500 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்துள்ளது சென்செக்ஸ். மீண்டும் பொருளாதாரம் வளர்ச்சி நிலைக்குத் திரும்பும் அறிகுறிகள் தோன்றியிருப்பதால், 2003-2008 ஆண்டுகளில் நிலவியதைப் போன்ற சாதகமான நிலை தோன்ற வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 15 ஆண்டுகளில் சென்செக்ஸ் 1 லட்சம் புள்ளிகளை எளிதில் எட்டிவிடும் என்றும் இந்த கணக்கீடு தெரிவிக்கிறது.
இதை நிரூபிக்க பல்வேறு கணக்கீடுகளை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications