காஷ்மீர் - பெண் உட்பட மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு: நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவிய மூன்று தீவிரவாதிகளை ஜம்மு காஷ்மீர் போலீசார் சுட்டு கொன்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மும்பை மீது தாக்குதல் நடத்தினர். அவர்களில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் பிடிபட்டான். மற்றவர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள்.
இந்நிலையில் இது போன்ற வெறி தாக்குதலை தீவிரவாதிகள் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மீண்டும் அரங்கேற்றலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீருக்குள் சமீபத்தில் 400க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்று தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளனர்.
தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இதுவரை நடந்த சண்டையில் சுமார் 30 தீவிரவாதிகளும், 10 ராணுவ வீரர்களும் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இந்திய ராணுவத்துக்கு ஜம்முவில் இருந்து வட கிழக்கே சுமார் 180 கிமீ., தூரத்தில் உள்ள தோடா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் உள்ளூர் போலீசாருடன் கிளம்பி அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.
இதில் அந்த வீட்டில் தங்கியிருந்த ஒரு பெண் தீவிரவாதி உட்பட மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் பிப்லாவ் நாத் கூறுகையில்,
நேற்று காலை 9.00 மணிக்கு துவங்கிய என்கவுன்டர் பிற்பகல் வரை நீடித்தது. இதில் 1 பெண் உட்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த இரண்டு துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்.
தீவிரவாதிகள் கூட்டத்தை சேர்ந்த பெண் தீவிரவாதி சுட்டு கொல்லப்படுவது இதுவே முதல் முறை என்றார்.
இதையடுத்து காஷ்மீர் பகுதியில் ஆண் தீவிரவாதிகளை தொடர்ந்து சில பெண் தீவிரவாதிகளும் ஊடுருவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியான அந்த பெண் தீவிரவாதியின் பெயர் ஷகிதா பானு என தெரிகிறது. மற்ற இரண்டு ஆண் தீவிரவாதிகளின் பெயர்கள் நிசார் அகமது, ரபீக் குஜ்ஜார். இவர்கள் மூன்று பேருமே லஷ்கர்- இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications