ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கொழும்பு செல்கிறார் - வன்னி தமிழர்களையும் சந்திக்கிறார்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இந்திய ஆன்மீகத் தலைவரும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் 3 நாள் பயணமாக திங்கள்கிழமை கொழும்பு செல்கிறார். வன்னிக்குச் சென்று அங்கு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களை சந்தித்துப் பேசுகிறார்.
புத்த மதத் தலைவர்களையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து தற்போதைய அரசியல் மற்றும் வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயவுள்ளார் ரவிசங்கர்.
வன்னியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
அதிபர் ராஜபக்சேவையும் அவர் சந்திக்க்க கூடும் எனத் தெரிகிறது.
வவுனியாவில் வாழும் கலை நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகளையும் அவர் பார்வையிடுவார்.












Click it and Unblock the Notifications