ஸ்பெயின், போலந்தில் ஒரு வார பயணம் - கிளம்பினார் பிரதீபா பாட்டீல்
டெல்லி: ஸ்பெயின், போலந்து ஆகிய நாடுகளில் ஒரு வார கால பயணமாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று காலை கிளம்பிச் சென்றார்.
இந்த பயணத்தின்போது இந்தியாவுக்கும், ஸ்பெயின் மற்றும் போலந்துக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
குடியரசுத் தலைவரின் பயணத்திற்கு முன்னதாக அவருடன் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தொழில் கொள்கைத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிவில் அணு சக்தித் துறையில் இந்தியாவும், ஐரோப்பாவும் கை கோர்த்து செயல்படும் காலம் வந்துள்ளது.
சிவில் அணு சக்தியில் வல்லரசாக உருவாகி வருகிறது இந்தியா. எனவே இந்தியாவும், ஐரோப்பாவும் இத்துறையில் இணைந்து செயல்பட வேண்டியது முக்கியமாகும்.
குடியரசுத் தலைவரின் பயணத்தின்போது பொருளாதார பிரச்சினைகள் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படும் என்றார்.
ஸ்பெயினுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும்.
குடியரசுத் தலைவருடன் சிஐஐ, எப்ஐசிசிஐ, அசோசசாம் ஆகிய வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய உயர் மட்டக் குழுவும் உடன் சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications