ராணுவம் வெறித் தாக்குதல் - 1000 தமிழர்கள் படுகொலை

கொத்துக் குண்டுகள் உள்பட தங்களிடம் உள்ள அனைத்து வகையான ஆயுதங்களையும் பயன்படுத்தி, வான்வழி மற்றும் தரை வழித் தாக்குதலை இன்று அதிகாலை முதல் இலங்கைப் படைகள் மேற்கொண்டன.
புதுக்குடியிருப்புப் பகுதியில் இந்த பயங்கர தாக்குதல் இன்று அதிகாலை தொடங்கியது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் தாக்குதல் நடந்தது.
மேலும், பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது.
அனைத்து வகை பேரழிவு ஆயுதங்களையும் கொண்டு இலங்கைப் படைகள் மூர்க்கத்தனமாக நடத்திய இந்தத் தாக்குதலில், 1000க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. 1200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஏற்கனவே பொக்கணைப் பகுதிக்குச் சென்ற அப்பாவி மக்களை மனிதக் கேடயமாகக் கொண்டு வெறித்தனமாக தாக்கியுள்ளது இலங்கை ராணுவம்.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
புலிகளுக்கு 24 மணி நேர கெடு
இதற்கிடையே, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், அவருடன் இருப்பவர்களும் இன்னும் 24 மணி நேரத்திற்குள் சரணடைந்து விட வேண்டும் என இலங்கை அதிபர் ராஜபக்சே எச்சரித்து கெடு விதித்துள்ளார்.
இதையடுத்து கெடு முடிந்த பின்னர் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் குறி வைத்து இலங்கைப் படைகள் தாக்கக் கூடும் என்ற பேரச்சம் எழுந்துள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications