முலாயம் சிங் தமிழகத்தில் 2 நாள் பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களுக்காக அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் 2 நாட்கள் பிரசாரம் செய்யவுள்ளார்.
சமாஜ்வாடி கட்சி தமிழகத்தில் மதுரை, நெல்லை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, திண்டுக்கல், கோவை, மத்திய சென்னை, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை உள்பட 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சென்னை உள்ளிட்ட 5 தொகுதிகளில் முலாயம் சிங் யாதவ் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.
மே மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தமிழகம் வரும் முலாயம் சிங், சென்னை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, நெல்லை ஆகிய ஊர்களில் பேசுகிறார்.
பிரசாரத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கட்சியின் மாநில செயல் தலைவர் இளங்கோ யாதவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications