கன்னியாகுமரியில் இன்று பிரசாரத்தைத் தொடங்குகிறார் ஸ்டாலின்
நாகர்கோவில்: மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி தொகுதியில் தொடங்குகிறார்.
இன்றும் நாளையும் அவர் கன்னியாகுமரி வேட்பாளர் ஹெலன் டேவிட்சனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
22ம் தேதி தூத்துக்குடி தொகுதியிலும், 23ம் தேதி விருதுநகர் தொகுதியிலும், அவர் பிரச்சாரம் செய்கிறார்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.
இதற்காக இன்று, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் வருகிறார். பிற்பகல் 3 மணிக்கு குமரி-கேரள எல்லையான களியாக்கவிளையில் அவருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அங்கிருந்து அவர் பிரசாரத்தை தொடங்குகிறார். இரவு 9.45க்கு தக்களையில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
21ம் தேதி பகல் 3 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் அவர் இரவு 9.40க்கு ஆரல்வாய்மொழியில் பிரசாரத்தை நி்றைவு செய்கிறார்.
2 நாட்களும் 55க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்கிறார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு












Click it and Unblock the Notifications