ராகிங்-மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை
அகமதாபாத்: ராகிங் காரணமாக அகமதாபாத் கல்லூரி மாணவி ஒருவர் விடுதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சிங்கி நர்சிங் பயிற்சி கல்லூரியில் அங்கிதா வெக்தா என்ற மாணவி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் கல்லூரி விடுதியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் தனது மகளின் மரணத்துக்கு ராகிங் தான் காரணம் என அவரது தந்தை கணபத் வெத்கா கூறியுள்ளார். அவர் கூறுகையில், எனது மகள் கல்லூரியில் ராகிங் நடப்பதாக எங்களிடம் கூறியுள்ளார். ராகிங்க காரணமாக தான் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றார்.
இறந்த போன மாணவியின் தாயாரும், தங்கையும் சில மூத்த மாணவிகளின் ராகிங் காரணமாக அங்கிதா இறந்து போனதாக தெரிவித்துள்ளனர். ஆனால், இதை கல்லூரி நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் இது கொலையா, தற்கொலையா அல்லது அவர் ராகிங் மூலம் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்பது தெரிய வரும். இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications