நாடாளுமன்ற வீதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முற்றுகை- ஸ்தம்பித்தது லண்டன்
இலங்கை இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி கடந்த 2 வாரங்களை லண்டனை உலுக்கிஎடுக்கும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் தமிழர்கள்.
இந்த நிலையில் நேற்று காலை முதல் அங்கு நாடாளுமன்றம் அருகே முற்றுகைப் போராட்டத்தி்ல தமிழர்கள் குதித்துள்ளனர்.
நேற்றுதான் 3 மாத இடைவெளிக்குப் பின்னர் நாடாளுமன்றம் கூடியது. இதனால் எம்.பிக்கள் நாடாளுமன்றம் வருவதற்கு பெரும் சிரமமாகிப் போனது.
நாடாளுமன்ற முன்பாக உள்ள சதுக்கத்தைச் சுற்றி போடப்பட்டுள்ள கம்பிவேலிகளை பிய்த்து எறிந்து விட்டு தமிழர்கள் கோபாவேசமாக போராட்டத்தில் குதித்தனர்.
ஏற்கனவே இங்கு தமிழர்கள் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் கூடி பெரும் போராட்டங்களை நடத்தியுள்ளதால், கடந்த 11 ஆம் நாள் முதல் இந்த சதுக்கத்தினுள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்த முடியாத வகையில் சதுக்கத்தைச் சுற்றி கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தது.
மேலும், 14 ஆவது நாளாக சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்தி வரும் தமிழர் சுப்பிரமணியம் பரமேஸ்வரனை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளிலும் காவல்துறையினர் இறங்கியிருந்தனர்.
இந்நிலையிலேயே நாடாளுமன்றத்துக்கு முன்பாக நேற்று அதிகாலை முதல் 7 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் திரண்டனர்.
இலங்கையில் போரை உடனடியாக நிறுத்துமாறு அவர்கள் உரக்க முழக்கமிட்டனர். மேலும் வன்னி பாதுகாப்பு வளையப் பகுதியில், ராணுவத் தாக்குதலில் 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதையும் கண்டித்து கோஷமிட்டனர்.
இங்கிலாந்து அரசாங்கமும் அனைத்துலக சமூகமும் உடன் தலையிட்டு போரை இத்துடன் நிறுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையிலான முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர்களால் பெருமளவில் எழுப்பப்பட்டு வருகின்றன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை அங்கிருந்து அகற்ற காவல்துறை முயற்சித்தபோதும் காவல்துறையினரின் எதிர்ப்புக்களையும் மீறுவதாக அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.
மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இருந்துள்ளதுடன் காவல்துறையினரின் அடக்குமுறைக்கு எதிராகவும் கிளர்ந்து எழுந்தனர்.
இதனால், காவல்துறையினர் அவர்களை எதுவும் செய்யமுடியாமல் அந்த இடத்திலேயே அவர்களை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்தனர்.
அதேநேரம் 14 ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடரும் சுப்பிரமணியம் பரமேஸ்வரனின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
குளிர்கால விடுமுறை முடிந்து கடந்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றம் கூடியநிலையில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டம் இங்கிலாந்து மீடியாக்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications