பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை-பவார்
டெல்லி: நான் பிரதமர் பதவிக்குப் போட்டியிடவில்லை. நான் அவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க எனது கட்சி அனுமதிக்காது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
பிரதமர் பதவிக்கான ஆசையை பலமுறை வெளிப்படுத்தி வருபவர் சரத் பவார். இப்போது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இவரை பிரதமராக்கலாம் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கூறியுள்ளார். இதன்மூலம் மூன்றாவது அணியில் குழப்பத்தை உருவாக்கியுள்ளார்.
அந்த அணியில் இடம் பெற்றுள்ள உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதியை பிரதமர் பதவிக்கு பெரும்பாலான கட்சிகள் முன்னிருத்தும் நிலையில் அதை குலைக்கவே அந்த அணியில் இருந்து கொண்டே பவாருக்கு கொடி பிடித்துள்ளார் ஜெயலலிதா.
இதையடுத்து குழப்பத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் பிரதமர் பதவி தங்களுக்குத் தரப்பட்டால் அதைப் பரிசீலிக்கத் தயார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.
இந் நிலையில் சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையாக, நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை. அவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க எனது கட்சி என்னை அனுமதிக்காது. ஆசைகள் இருக்கலாம், ஆனால், அந்த ஆசை நிறைவேறுமா என்று யோசித்துப் பார்த்தே எந்த முடிவையும் எடுக்க வேண்டும். நாங்கள் வெறும் 40 இடங்களில் தான் போட்டியிடுகிறோம். இதி்ல் பிரதமர் பதவிக்கு நான் குறி வைப்பேனா?.
காங்கிரஸ் கூட்டணி வென்றால் மன்மோகன் சிங்கே பிரதமராகலாம். ஆனால், இதில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்று பவார் கூறியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications