நான் உங்க கூடத்தான் இருக்கேன்-பிரணாபிடம் லாலு
ஹவுரா (மேற்கு வங்கம்): அரசியல் என்றாலே காமெடி என்றாகி விட்டது. என்ன வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எப்போது வேண்டுமானாலும் எந்த நிலையை வேண்டுமானாலும் எடுக்கலாம். அதற்கு சரியான உதாரணம் லாலு பிரசாத் யாதவ்.
இவர் ஒரு தேர்ந்த நடிகரைப் போல. சில நேரம் ஹீரோவாக தெரிவார். சில நேரம் செமத்தியாக காமெடி செய்வார். சில நேரம் வில்லனைப் போல நடந்து கொள்வார்.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தூண்களில் ஒருவராக இருந்தார். ஆனால் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் சோனியா காந்திக்கும், காங்கிரஸுக்கும் பெரும் ஆப்பைக் கொடுத்தார் லாலு.
3 சீட் மட்டுமே பீகாரில் காங்கிரஸுக்கு ஒதுக்கி கட்சியை கடுப்படித்தார். இதனால் அங்கு காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.
அத்தோடு நில்லாமல் முலாயம் சிங்குடன் இணைந்து நான்காவது அணியை உருவாக்கினார் லாலு.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மன்மோகன் சிங்கை மீண்டும் பிரமதராக ஏற்க முடியாது என்று அதிரடியாக அறிவித்தார் லாலு.
இதனால் அவர் மீதான காங்கிரஸின் கடுப்பு மேலும் மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று திடீரென பிரணாப் முகர்ஜியை தொடர்பு கொண்டார் லாலு. அப்போது பிரணாபிடம், நான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விட்டு விலக வில்லை என்று கூறியுள்ளார்.
அவசரம் அவசரமாக பிரணாபை லாலு தொடர்பு கொண்டு பேசியதற்கு முக்கிய காரணம், பீகார் மாநிலம் சமஸ்டிபூரில் நடந்த கூட்டத்தில் பிரணாப் பேசுகையில், வாசலில் கிடக்கும் மிதியடி போல காங்கிரஸை நினைக்கிறார் லாலு. இப்படிப்பட்டவரை கூட்டணியில் வைத்துக் கொண்டிருப்பது முடியாத காரியம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் பிரணாபை போனில் பிடித்து உங்களுடன்தான் நான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் லாலு.
இதுகுறித்து பிரணாப் கூறுகையில், மத்தியில் மீண்டும் காங்கிரஸ் அரசு அமைய நான் உறுதுணையாக இருப்பேன். உங்களுடன்தான் இருப்பேன் என்று லாலு கூறினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விட்டு விலகவில்லை என்றும் அவர் தெரிவித்தார் என்றார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications