ரயிலை கடத்தி விடுவித்த நக்சல்கள்!-பயணிகள் பத்திரம்
ராஞ்சி: ஜார்க்கண்ட மாநிலத்தில் பர்கனாவில் இருந்து முகல்சராய் நகருக்கு சென்று கொண்டிருந்த ரயிலை நக்சலைட்டுகள் கடத்தினர். 200 பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்த அவர்கள், பின்னர் ரயிலையும், பயணிகளையும் விடுவித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
ஜார்க்கண்ட மாநிலத்தில் உள்ள உதாரி ரோடு ரயில் நிலையத்துக்கு இன்று காலை வந்த நக்சல்கள் சிலர் ரயில் நிலையத்தை தீ வைத்து எரித்தனர்.
பின்னர் அவர்கள் பர்கனா நகரில் இருந்து முகல்சராய் நகருக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் பயணிகள் போல் ஏறிக்கொண்டனர். ரயில் பாதி வழியில் சென்று கொண்டிருந்த போது நக்சல்களில் ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்.
இதைத் தொடர்ந்து நக்சல்கள் ரயிலில் இருந்த சுமார் 75 பயணிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் இந்த கடத்தல் நாடகம் நீடித்தது. அதன் பின்னர் ரயிலையும், பயணிகளையும் விடுவித்த நக்சலைட்டுகள் அங்கிருந்து போய் விட்டனர்.
இதுகுறித்து தான்பாத் கோட்ட முதுநிலை ரயில்வே மேலாளர் நீரஜ் அம்பஸ்ட் கூறுகையில், அனைத்து பயணிகளும் பத்திமாக உள்ளனர். ரயில் தனது பயணத்தை தொடர்கிறது என்றார்.
நாளை ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களில் 2வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதைக் குலைக்கும் முகமாகவே இந்த நடவடிக்கையில் நக்சலைட்டுகள் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த மாநிலங்களில் நடந்த முதல் கட்டத் தேர்தலின்போது நக்சலைட்டுகள் அட்டகாசம் செய்தனர். இதில் 17 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications