அப்பாவித் தமிழர்களை இலங்கைப் படைகளிடமிருந்து காப்பாற்றுங்கள் - விடுதலைப் புலிகள்
வன்னி: முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாகியுள்ள வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் அனைத்துலக சமூகமும் தமது கவனத்தைச் செலுத்த வேண்டும். இலங்கைப் படைகளிடமிருந்து அப்பாவித் தமிழர்களைக் காக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 48 மணி நேரத்தில் சிறிலங்காவின் ஆயுதப்படைகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி புதுமாத்தளன், வலைஞர்மடம் ஆகிய இரு முன்னணி நிலைகள் ஊடாகவும் உள்ளே புகுந்துள்ளனர்.
தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதன் மூலமாக விடுதலைப் புலிகளின் எதிர்ப்பைப் பலவீனப்படுத்துவதற்கு சிறிலங்கா ஆயுதப்படையினர் முயற்சித்துள்ளனர்.
அதேவேளையில் முன்னணிப் பகுதிகளில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் இந்தப் பொதுமக்களையே படையினர் பயன்படுத்தியிருக்கின்றனர்.
இதனை எதிர்க்க முனைந்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த நடவடிக்கைகளின் போது சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என தொடக்க கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (20.04.09) ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் சுமார் 2 ஆயிரத்து 300 வரையிலானவர்கள் காயமடைந்தும் உள்ளனர். இன்றும் இந்த நிலை தொடர்கின்றது.
படுகாயமடைந்து ஆபத்தான நிலைமையில் உள்ள 2 ஆயிரம் மக்களைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்குமாறும் கப்பல் மூலமாக அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
பெருந்தொகையானவர்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டிருப்பதால் உடனடியாக உணவு விநியோகம் மேற்கொள்ளப்படுவதும் அவசியமானதாகியுள்ளது.
புதுமாத்தளன் தற்போது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வந்துவிட்டதால் புதிய தளம் ஒன்றில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க கப்பல்கள் வந்து செல்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை விடுதலைப் புலிகள் அமைப்பு வழங்கியுள்ளது.
மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு மக்களைப் பயன்படுத்துவதும் கடுமையான போர்க் குற்றங்கள் என்பதுடன், இந்த மனிதப் படுகொலைக்குக் சிறிலங்கா அரசாங்கமும், ஆயுதப் படைகளின் தளபதிகளுமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டியவர்களாகும்.
இந்த போருக்குள் அகப்பட்டுள்ள தமிழ்ப் பொதுமக்களை மீட்பதற்கு விரைந்து செயற்பட வேண்டும் என ஐ.நா. உட்பட அனைத்துலக சமூகத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.
இந்தப் போர்க்குற்றங்கள் மிகவும் கடுமையானவை எனக் கருதும் விடுதலைப் புலிகள், இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அவசரமான அனைத்துலக ரீதியான நடவடிக்கை அவசியம் எனவும் கருதுகின்றது.
கடுமையான போர்க்குற்றங்களை மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த தீவிரமான மனிதாபிமானப் பிரச்சினையை எதிர்கொள்ளத்தக்க விதமாகச் செயற்படுமாறும் கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.
தற்கொலை தாக்குதல் நடத்தவில்லை-நடேசன்:
இதற்கிடையே, தமிழர்களுக்கு எதிராக மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக ராணுவம் வெளியிட்ட தகவலை, விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பி.நடேசன் மறுத்து இருக்கிறார்.
மேலும், 3-வது நாட்டின் மேற்பார்வையில் போர்நிறுத்தத்துக்கு விடுதலைப்புலிகள் தயார் என்றும் அவர் அறிவித்தார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications