மதுரை-மத்திய சென்னை: 'அவாட்' செய்யும் கனிமொழி
சென்னை: திமுக ராஜ்யசபா உறுப்பினர் கவிஞர் கனிமொழி நாளை முதல் தனது 17 நாள் பிரசாரத்தைத் தொடங்குகிறார். அவரது பிரசாரத் திட்டத்தில் அழகிரி போட்டியிடும் மதுரை, தயாநிதி மாறன் போட்டியிடும் மத்திய சென்னை ஆகியவை இடம் பெறவில்லை.
வட சென்னையில் நாளை தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார் கனிமொழி. அங்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வாக்கு கேட்கிறார்.
23-ந் தேதி நாகப்பட்டினம், 24-ந் தேதி தஞ்சாவூரில், 25-ந் தேதி மீண்டும் வட சென்னையில் ஓட்டு சேகரிக்கிறார்.
27-ந் தேதி ஆர்.கே.நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு மீண்டும் டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக பேசுகிறார்.
28-ந் தேதி சிவகங்கை, விருதுநகர், 29-ந் தேதி ராமநாதபுரம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.
மீண்டும் 2 நாட்கள் வட சென்னையில்..
மே 1, 2 ஆகிய தேதிகளில் வட சென்னையில் மீண்டும் பிரசாரம் செய்கிறார். தொகுதிக்கு உட்பட்ட எல்லா தொகுதிகளிலும் திறந்த வேனில் சென்று ஆதரவு திரட்டுகிறார்.
3-ந் தேதி பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி, 4-ந் தேதி தொல்.திருமாவளவனை ஆதரித்து சிதம்பரத்திலும், ஓய்வு பெற்ற நீதிபதி சாமிதுரையை ஆதரித்து விழுப்புரத்திலும் பிரசாரம் செய்கிறார்.
5-ந் தேதி கள்ளக்குறிச்சி, 6-ந் தேதி தர்மபுரி, 7-ந் தேதி பெரம்பலூரில் நடிகர் நெப்போலியனை ஆதரித்து, 8-ந் தேதி திருச்சியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
9-ந் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதியிலும், 10-ந் தேதி கன்னியாகுமரி தொகுதியிலும் ஆதரவு திரட்டுகிறார். 17 நாட்கள் சூறாவளி பிரசாரத்தில் கனிமொழி ஈடுபடுகிறார்.
மதுரை, மத்திய சென்னையில் பிரசாரம் இல்லை..
கனிமொழியின் பிரசாரப் பயணத் திட்டத்தி்ல மு.க.அழகிரி போட்டியிடும் மதுரை தொகுதி இடம் பெறவில்லை. அதேபோல தயாநிதி மாறன் போட்டியிடும் மத்திய சென்னை தொகுதியும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications