நான் பேச நினைத்ததெல்லாம்-நாஞ்சில் சம்பத்!
கோவை: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து மதிமுக.கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கோவை சிறையில் இருந்து விடுதலையானார்.
திருப்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக மதிமுககொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்தை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.
இந்திய இறையாண்மைக்கு விரோதமாக தொடர்ந்து அவர் பேசி வந்ததாக கூறி தேசப் பாதுகாப்பு சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து நாஞ்சில் சம்பத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நாஞ்சில் சம்பத்துக்கு ஆதரவாக வைகோவே நேரில் ஆஜராகி வாதாடினார். இதனையடுத்து, அவரை சென்னனை உயர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாஞ்சில் சம்பத், 46 நாட்களுக்கு பின் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நான் பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ள இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்க முடிவு செய்திருந்தேன். சிறையில் அடைக்கப்பட்டதால் அங்கு எல்லாம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
சிறையில் இருந்த காலத்தில் 'நான் பேச நினைத்ததெல்லாம்' என்ற தலைப்பில் ஒரு புத்தகமும், 'தேச பாதுகாப்பு சட்டத்தில் நான்' என்ற ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளேன். இந்த இரு புத்தகங்களும் விரைவில் வெளியிடப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications