இலங்கை-செயற்கோள் படங்களை வெளியிட்ட யுஎஸ்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்கடன்: இலங்கை போர் பகுதியின் செயற்கோள் படங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. வன்னி பகுதியில் தமிழர்கள் 25 ஆயிரம் டென்ட் அமைத்து வாழ்வது அதில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி தமிழர்கள் ஆயிரக்கணக்கில் பலியாகி வருகின்றனர். இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் போர் பகுதியில் எடுக்கப்பட்ட தனது செயற்கோள் படங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதில் சுமார் 8 சதுர மைல் அளவு உள்ள இடத்தில் அப்பாவி தமிழர்கள் 25 ஆயிரம் டென்ட்களில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டென்ட்களின் எண்ணிக்கையை வைத்து அங்கு சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் தமிழர்கள் இருப்பார்கள் என அமெரிக்கா கணித்துள்ளது. ஆனால், அதைவிட அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் அந்த பகுதியில் உணவின்றி தவித்து வருகின்றனர்.

அதேபோல் இலங்கை ராணுவத்திடம் போர் நிறுத்தம் செய்ய கோரிக்கை விடுத்தோம் அவர்கள் அதை மறுத்துவிட்டனர். விடுதலை புலிகளிடம் தமிழர்களை பாதுகாப்பு பகுதிக்கு வெளியேற அனுமதிக்க சொன்னோம். ஆனால், அதுவும் நடக்கவில்லை.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி மைக்கேல் ஓவன் கூறுகையில், அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கையில் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ராபர்ட் உட் கூறுகையில், வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், இலங்கை போர் முடிவுக்கு வந்தவுடன் அங்கு செய்யப்பட வேண்டிய மறுமலர்ச்சி திட்டம் குறித்து யோசித்து வருகிறார் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+