நளினி விடுதலை கோரும் மனு-தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து இரு தரப்பும் தாக்கல் செய்த பதில் மனுவில், இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் அந்தத் தீர்ப்பை வேறு எந்தக் கோர்ட்டும் பரிசீலிக்க முடியாது என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் நீதிபதிகள் எலிபி தர்மாராவ், செல்வம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் கூடுதல் பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.
அப்போது இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என மனுதாரரின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை நீதிபதிகள் நிராகரித்தனர்.
மேலும், இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications