புதிய பார்வை நடராஜன் வீட்டில் போலீஸ் ரெய்டு
சென்னை: புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜனின் வீட்டில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். ஆனால் விடுதலைப் புலிகள் ஆதரவு சிடிக்கள் எதுவும் சிக்கவில்லை.
பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி இல்லாமல் தேர்தல் விளம்பர சி.டி.கள் வெளியிடுவது, எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் விளம்பரம் செய்வது, தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகவும், ஆட்சேபகரமாகவும் காட்சிகள் மற்றும் வசனங்கள் அடங்கிய சி.டி.கள் வெளியிடுவது போன்ற குற்றங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று முன்தினம் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன் அறிவித்து இருந்தார்.
இதன் அடிப்படையில் சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பெசன்ட்நகர் கலாசேத்திரா காலனியில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராஜனின் வீடு உள்ளது. அங்கு துணை கமிஷனர் திருஞானம் தலைமையில் போலீசார் வந்தனர்.
அப்போது வீட்டில் நடராஜன் இல்லை. வீ்ட்டில் ஆட்சேபகரமான சி.டி.க்கள் இருக்கிறதா என்பதற்காக சோதனையிட வேண்டும் என்று அங்கிருந்தவர்களிடம் போலீசார் கூறினர். பின்னர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சில சிடிக்கள் கிடைத்தன. அவற்றை வீட்டிலிருந்த சி.டி. பிளேயரில் போலீசார் போட்டுப்பார்த்தனர். ஆனால் போலீசார் எதிர்பார்த்து வந்த எந்த சிடியும் அதில் இல்லை.
இதையடுத்து சிடி எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டு போலீஸார் போய் விட்டனர்.
போலீஸார் போன பின்னர் நடராஜன் வீட்டுக்கு வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் இல்லாத நேரம் வீட்டில் சோதனை நடத்தியது தவறு. இதுதொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறேன்.
பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் இன்டர்நெட்டில் உள்ள இலங்கை தொடர்பான படங்களை டவுன்லோட் செய்வதற்கு மற்றவர்களுக்கு போன் மூலம் நான் கூறுவதுண்டு.
எனது போனை வழக்கம் போல் டேப்' செய்யும் போலீசார், அரசுக்கு எதிரான சி.டி. எதையோ நான் வெளியிடப் போகிறேன் என்று பயந்து இந்த சோதனையை செய்துள்ளனர். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications