கூட்டணியை விட்டு வெளியேறுவோம்-காங்கிரஸை பணிய வைத்த திமுக

இலங்கையில் போரை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் அவர்கள் விடுத்த கோரிக்கையை கருணாநிதி ஏற்க மறுத்துவிட்டார்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படாவிட்டால் நான் உயிர் விடவும் தயார் என்று கருணாநிதி கூறிவிட்டார்.
இதையடுத்து சோனியா மற்றும் பிரதமரின் சார்பில் சிறப்புத் தூதர் ஒருவர் சென்னை விரைந்து கருணாநிதியை சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அப்படி யாரும் வரவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தான் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்தார்.
போரை நிறுத்த வைக்க மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் விரைவில் நல்ல பலன் கிடைக்கும் என்று சிதம்பரம் கூறினார். ஆனால், போர் நிறுத்தப்பட்டதாக தகவல் வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவேன் என்று கருணாநிதி கூறிவிட்டார்.
இதையடுத்து இலங்கை வெளியுறவு அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் இறங்கினர். இதைத் தொடர்ந்து தாக்குதலை நிறுத்துவதாக அந் நாட்டின் உறுதிமொழியை மத்திய அரசு பெற்றது.
கை கழுவ முயன்ற காங்கிரஸ்:
முன்னதாக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கையைக் கழுவப் பார்த்தது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து நாங்களும் கவலை கொண்டுள்ளோம். எங்களால் முடிந்ததை செய்து கொண்டு தான் உள்ளோம். கருணாநிதியின் உடல் நிலை குறித்து அதிகமாக கவலை கொண்டுள்ளோம். இன்னொரு நாட்டுக்கு எங்களால் உத்தரவு போட முடியாது என்றார்.
இதையடுத்து கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக திமுகவிடமிருந்து அறிவிப்பு வெளியாகும் என்று மிரட்டல் போனதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்தே திடீரென இலங்கையை நெருக்கியது மத்திய அரசு என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.
கி.வீரமணி...
முன்னதாக கருணாநிதியை சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உண்ணாவிரதத்தை கை விடுமாறு கேட்டுக் கொண்டார். பி்ன்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், கருணாநிதி தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கான போராட்டத்தை வேறு விதமாக நடத்தலாம். நீங்கள் உத்தரவிடுங்கள், அதை நாங்கள் முன் நின்று நடத்துகிறோம் என்றார்.
வேடத்தை களைக்கும் உண்ணாவிரதம்-நக்கீரன் கோபால்
நக்கீரன் கோபால், முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்தினார். பின்னர் அவர் கூறுகையில், உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் மீது பாசமும், அன்பும் கொண்டவர் கருணாநிதி மட்டுமே. ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்காக போராடி வருபவர் இவர் மட்டுமே.
ஆனால் சில வேடதாரிகள் திடீரென தமிழீழத்தை அமைப்போம் என கூறுகின்றனர், ஏதோ நாளைக்கே ஈழத்தை அமைத்துக் கொடுக்கப் போவதைப் போல.
இத்தனை காலமாக பேசாமல் இருந்து விட்டு, அங்கு ஈழத் தமிழர்களுக்கு முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்து இப்போது தமிழ் ஈழம் அமைப்போம் என்று கூறுகின்றனர்.
அப்படிப்பட்ட வேடதாரிகளின் வேடத்தைக் களைக்கவே இன்று உண்ணாவிரதம் இருக்கிறார் கலைஞர். இந்த உண்ணாவிரதம் உணர்வின்பால் ஏற்பட்டது. இது வெற்றி பெறும், வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
இந்த உண்ணாவிரதத்தால் கலைஞரின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications