என்னையும் பலி கொடுக்க தயார்-கருணாநிதி
சென்னை: இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் அதிபர் ராஜபக்சே கொன்று குவித்துள்ளார். அதே போல என்னையும் கொல்லட்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
உண்ணாவிரதம் இருந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
புலிகள் நேற்று போர் நிறுத்தத்தை அறிவித்தனர். இதனால் நேற்று இலங்கையில் போர் நிறுத்தம் வந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். நேற்று இரவுமுழுவதும் கண்விழித்து இலங்கையில் இருதரப்பிலும் போர் நிறுத்த அறிவிப்பு வந்துவிடாதா என்று ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால், அதைக் கூட ராஜபக்சே ஏற்க மறுத்துள்ளார்.
அப்பாவிகளைக் காக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளையும் ஏற்கவில்லை. இதனால் அங்கு தீவிரமான நடவடிக்கையில் இந்தியா இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. இதை வலியுறுத்தியே நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றார்.
போர் நிறுத்தம் கோரித்தான் இந்த உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளேன்.
என்னைப் பின்பற்றி யாரும் இவ்வாறு உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். இந்த பிரச்னையில் என்னை மட்டும் நான் பலிகொடுத்துக் கொள்கிறேன். மற்றவர்கள் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்ற என் கோரிக்கையை திமுகவினர் கட்டளையாக மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் அதிபர் ராஜபக்சே கொன்று குவித்துள்ளார். அதே போல என்னையும் பலி கொடுக்க நான் தயார் என்றார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications