மேற்கு தொடர்ச்சி மலையில் நக்சல்கள் நடமாட்டம்?
புளியங்குடி: தேர்தலை சீர்குலைக்க மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அதிகரிக்கலாம் என உளவுத்துறை கொடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 13ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்தலின் போது நக்சலைட்டுகளால் அசம்பாவிதம் சம்பவங்கள் நடக்கலாம் என உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வழியாக நக்சலைட்டுகள் ஊடுருவலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் புளியங்குடியிலிருந்து சிவகிரி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சத்தியமங்கலத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு தனிப்படை பிரிவு போலீசார் முகாமிட்டு்ள்ளனர்.
இரவு, பகலாக அவர்கள் மலைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வனத்துறை அதிகாரிகள் ஓத்துழைப்புடன் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் வரைப்படைத்தை பெற்று அங்கு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
மேலும் நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் உளவு பிரிவு போலீசாரும் புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கணகாணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைப்பகுதியில் புதிய ஆட்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸ் அல்லது வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு மலைவாழ் மக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications