இப்போது, மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையும் தாக்குதல்!
ராமேஸ்வரம்: இதுவரை இலங்கை கடற்படையிடம் சிக்கி சின்னாபின்னமாகி வந்த தமிழக மீனவர்கள் இப்போது இந்திய கடலோரக் காவல் படையிடம் சிக்கி தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
நமது நாட்டு படையே தாக்க ஆரம்பித்திருப்பதால் மீனவர்கள் பெரும் கொதிப்பும், கோபமும் அடைந்துள்ளனர். இன்று போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
ராமேசுவரம் துறைமுகம் மற்றும் சங்குமால் கடல் பகுதியில் இருந்து கடந்த 24-ந் தேதி 20-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து வந்தனர். அவர்கள் தேவசகாயம், ஜெரோமியஸ், பிச்சையா என்பவருக்கு சொந்தமான படகில் இருந்த 19 மீனவர்களின் அடையாள அட்டைகளை திடீரென சோதனை செய்தனர்.
இந்த நிலையில் அந்த படகில் இருந்த அனைத்து மீனவர்களையும் நாட்டுப்படகில் இருந்து இந்திய கடலோர காவல் படையினர் தங்களது கப்பலில் ஏற்றி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பீதியடைந்த மீனவர்கள் மீன் பிடிப்பதை கைவிட்டு பாதியிலேயே கரைதிரும்பினர்.
இது குறித்து அடிமை, குழந்தைசாமி, சவேரியார் அடிமை முருகேசன் ஆகியோர் கூறுகையில், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது பெரிய கப்பலில் வந்த இந்திய கடலோர காவல் படையினர் எங்களிடம் எதுவும் கூறாமல் அனைவரையும் படகில் இருந்து கப்பலில் ஏற்றி மண்டியிட வைத்து தாக்கினர். காரணம் கேட்டபோது அவர்கள் ஒன்றும் கூறவில்லை.
சுமார் 2 மணி நேரம் அவர்கள் எங்களை சித்ரவதை செய்தனர். அதன் பின்னர் கரையை நோக்கி செல்லும்படி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனால் பாதியிலேயே கரை திரும்பினோம்.
இலங்கை கடற்படை தாக்கி வந்த நிலையில் இந்திய கடலோர காவல்படையும் தாக்க தொடங்கி உள்ளது எங்களை வேதனை அடைய வைத்துள்ளது என்றார்.
இதுகுறித்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
இந்தியக் கடலோரக் காவல் படையின் செயலைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications