கேரளாவுக்கு எரி சாராயம் கடத்திய இருவர் கைது
நெல்லை: நெல்லை வழியாக கேரளாவுக்கு எரி சாராயம் கடத்த முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகேயுள்ள கங்கைகொண்டான் வழியாக கேரளாவிற்கு ஸ்பிரிட் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கங்கைகொண்டானில் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகனங்களை சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்த கேரளாவை சேர்ந்த லோடு ஆட்டோவில் இருந்து பிளாஸ்டிக் கேன்களை சோதனை செய்தனர்.
அவற்றில் எரி சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஆட்டோவில் இருந்த கொல்லத்தை சேர்ந்த டிரைவர்கள் ராஜேஷ், விபின் ஆகியோரை கைது செய்தனர்.
ரூ.3 லட்சம் மதிப்புள்ள 525 லிட்டர் எரி சாராயமும், அதை ஏற்றி வந்த லோடு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் பாண்டிசேரியில் இருந்து ஸ்பிரிட்டை கடத்தி கொல்லத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications