தேர்தல் பணிக்கு வந்த ஒரிஸ்ஸா போலீஸ்காரர் மரணம்
தூத்துக்குடி: நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக தூத்துக்குடி வந்த ஒரிஸ்ஸா போலீஸ்காரர் ஒருவர் மஞ்சள் காமாலையால் மரணமடைந்தார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு படையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போலீசாருடன் மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட உள்ளனர்.
இதற்காக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்திற்கு 300 மத்திய ரிசர்வ் போலீசார் நேற்று முன்தினம் ரயிலில் நெல்லைக்கு வந்தனர். இதில் 85 பேர் தூத்துக்குடிக்கு சென்றனர்.
அவர்களில் ஓரிசா மாநிலம் புவனேஸ்வர் அருகேயுள்ள வாலேஸ்வர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ்தே என்பவரும் வந்திருந்தார். இவர் மத்திய ரிசர்வ் போலீசின் 130வது படைபிரிவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பணியில் சேர்ந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.
தூத்துக்குடிக்கு செல்லும் வழியில் ரமேஷ்தே உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் மலேரியா மற்றும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவரது நிலைமை மோசமாக இருந்ததால் அவர் மேல்சிகிச்சைக்காக நேற்றுமுன் தினம் இரவு நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications