ஈழத் தமிழர்களுக்கு உதவ ரூ. 100 கோடி நிதி - மன்மோகன் அறிவிப்பு
டெல்லி: இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நல்வாழ்வுக்காக ரூ. 100 கோடி நிதியை அளிக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
போர்ப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கை:
போர் நடவடிக்கைகள் முற்று பெற்று விட்டது என்றும், கனரக துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் வழித்தாக்கும் போர் ஆயுதங்கள் போன்றவை, குடிமக்களை பெருமளவுக்கு கொல்லும் என்பதால், இலங்கை பாதுகாப்பு படைகள் அவற்றை பயன்படுத்தக்கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இலங்கை அரசு அறிவித்து உள்ளது.
மக்களை மீட்பதற்கும், அவர்களை காப்பாற்றுவதற்கும், தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கை பாதுகாப்பு படைகள் இனி கவனம் செலுத்தும்.
போர் முனையில் சிக்கிக்கொண்டு உள்ள தமிழ்க்குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகளே முதன்மையானவை ஆகும். அவற்றை தீர்ப்பதற்கு இலங்கை அரசு இன்று செய்துள்ள அறிவிப்பு முக்கியமான முதல் படியாகும்.
போர் முனையில் இருந்து வெளி வந்தோரின் துயரங்களை தணிப்பது மட்டும் இன்றி, போர் நடைபெறாத பகுதியில் இன்னும் தங்கி இருக்கும் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் தற்போதைய உடனடித் தேவையாகும்.
போர் பகுதியில் இருந்து வெளி கொணரப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு இந்திய பிரதமர் அவர்கள் 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளார் என்பதை அறிவித்திட மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிதியை பயன்படுத்துவதற்கான விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications