வன்னியிலிருந்து தப்பி யாலா காட்டில் பிரபாகரன்?

இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கி.மீ. நிலப்பரப்புக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அங்குதான் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. சிங்கள ராணுவ அதிகாரிகளும் இதையே கூறிவந்தனர்.
ஆனால், நிலைமை கை மீறும்போது, நீர்மூழ்கி கப்பல் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல பிரபாகரன் திட்டம் வைத்திருந்ததாக ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் மூத்த தலைவர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜார்ஜ் தெரிவித்ததாக ராணுவம் கூறியது.
இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் இதே கருத்தை தெரிவித்தார்.
ஆனால், போர் பகுதியில் இருந்து பிரபாகரனும் முக்கிய தளபதிகள் மற்றும் வீரர்களும் தப்பிச் சென்று விட்டதாக விடுதலைப்புலி வட்டாரங்களை மேற்கோள் காட்டி தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர் பகுதியில் பிரபாகரன் தற்போது இருக்க வாய்ப்பில்லை என்றும், அவர் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள யாலா காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டிருக்கலாம் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டது.
இது உண்மையானால், இலங்கை ராணுவத்துக்கு இதை மிகப்பெரிய அதிர்ச்சி வேறு இருக்காது என இலங்கை ஆதரவு இணைய தளங்கள் கூறியுள்ளன. இதனால் இலங்கை ராணுவம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
கிழக்கு மாகாணம் ஏற்கெனவே புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து, ராணுவத்தின் கைக்குப் போய்விட்டது. ஆனாலும் அங்கு புலிகளின் செயல்பாடுகள் தீவிரமாக உள்ளன. கொரில்லா முறையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
யாலா காட்டுப் பகுதியில் சமீபத்தில் பெரும் தாக்குதல் நடந்தது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications