தமிழர் பகுதிகளில் பல மணி நேரம் பீரங்கித் தாக்குதல் - பலர் பலி
முள்ளிவாய்க்கால் வடக்குப் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலை இலங்கை ராணுவம் மேற்கொண்டது.
சரமாரியாக சுடப்பட்டதால் அப்பாவி மக்கள் பங்கர்களுக்குள் போய் பதுங்கிக் கொண்டனர். இந்த பெரும் தாக்குதலில் பலர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்தனர். ஆனால் அவர்களில் பலரும் சிகிச்சை பெற வழியில்லாமல் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல வலைஞர் மடம் பகுதியிலும் பொதுமக்களை குறி வைத்து ராணுவம் தாக்குதல் நடத்தியது. முள்ளிவாய்க்காலின் தென் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பல நோயாளிகளும் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.
பல குழல் எறிகணை, பீரங்கித் தாக்குதல், கனரக மெஷின் துப்பாக்கி உள்ளிட்டவற்றைக் கொண்டு ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
வலைஞர் மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சாலைகளில் பிணங்கள் கிடக்கின்றன. காயமடைந்தவர்களும் ஆங்காங்கு விழுந்து கிடக்கின்றனர்.
எறிகணைத் தாக்குதலில், தற்காலிக மருத்துவமனையில் மட்டும் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கில் பலி...
மொத்த பலி எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என அஞ்சப்படுகிறது.
200க்கும் மேற்பட்டோர் காயத்துடன் தற்காலிக மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்களில் பலர் கட்டுக்களுடன் வந்துள்ளனர்.
இந்த நிலையில் பிற்பகல் 1.20 மணியளவில் விமானப்படை குண்டு வீச்சு விமானம் ஒன்று, தெற்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் வட்டமிட்டுச் சென்றதால் குண்டு வீசப் போகிறார்களோ என்ற பீதி ஏற்பட்டது. இதனால் மக்கள் அங்குமிங்கும் ஓடி அடைக்கலம் தேடினர். ஆனால் விமானம் மூலம் குண்டு எதுவும் வீசப்படவி்ல்லை.
ராணுவத்துக்கு 600 மீட்டர் முன்னேற்றம்..
இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் கடும் தாக்குதலையும் மீறி, வலைஞர்மடம் பகுதியில் 600 மீட்டர் அளவுக்கு ராணுவம் முன்னேறியுள்ளது. இங்கு நடந்த சண்டையில் ராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications