கருணாநிதியின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி-திருமா
சென்னை: இலங்கையில் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது முதல்வர் கருணாநிதியின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
உண்ணாவிரதம் இருந்த முதல்வர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் திருமாவளவன், மத்திய இணையமைச்சர் இளங்கோவன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,
தமிழர்களின் மனதில் நீங்காமல் இருந்து வந்த வேதனைக்கு முதல்வரின் உண்ணாவிரதம் ஆறுதல் அளித்திருக்கிறது. பலவித போராட்டங்களின் விளைவாக இந்திய பிரதிநிதிகள் இலங்கை சென்று போரை நிறுத்தும்படி வலியுறுத்திவிட்டு வந்தனர்.
48 மணி நேரத்தில் நல்ல தகவல் வரும் என்று காத்திருந்து, போர் நிறுத்த அறிவிப்பு இன்னும் ஏன் வரவில்லை என்ற நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வர் ஈடுபட்டார்.
உண்மையிலேயே, மிகுந்த அக்கறையோடு போர் நிறுத்தப்பட வேண்டும், ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அக்கறையோடு அவர் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
ஆனால் இதை சிலர் வேண்டுமென்றே கொச்சைப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும். இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவும் இந்தியா முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications