சென்செக்ஸில் இன்று ஒரே நாளில் 401 புள்ளிகள் உயர்வு!
மும்பை: இரண்டு மூன்று நாள் தடுமாற்றத்துக்குப் பின் இந்திய பங்குச் சந்தை இன்று அதிகபட்ச ஏற்றம் கண்டது. இன்று ஒரே நாளி்ல் 401 புள்ளிகளைப் பெற்றது சென்செக்ஸ். நிப்டியில் 111 புள்ளிகள் அதிகரித்து, 3500 புள்ளிகள் என்ற அளவை நெருங்கிக் கொண்டுள்ளது.
வங்கிகள் மற்றும் ஐடி நிறுவனப் பங்குகள் நல்ல உயர்வு கண்டன. ஐசிஐசிஐ, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், டாடா பவர், ரிலையன்ஸ் கேபிடல், சுஸ்லான் எனர்ஜி, சீமென்ஸ், ஹீரோ ஹோண்டாவின் பங்குகள் நல்ல விலையில் கைமாறின.
ஐடியா செல்லுலர், அம்புஜா சிமெண்ட்ஸ், ரிலையன்ஸ் பவர் மற்றும் நால்கோவின் பங்குகள் மட்டுமே இன்று சரிவைச் சந்தித்தன.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 11403 புள்ளிகளாகவும், நிப்டி 3474 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.
சர்வதேச பங்குச் சந்தைகள் ஸ்வைன் ப்ளூ காரணமாக 2 சதவிகிதம் வரை வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் இந்தியப் பங்குச் சந்தை அதிகபட்ச உயர்வைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications