107 தொகுதிகளில் நாளை 3வது கட்டத் தேர்தல்
டெல்லி: நாளை நாடு முழுவதும் உள்ள 107 மக்களவைத் தொகுதிகளில் மூன்றாவது கட்டமமாக வாக்குப் பதிவு நடக்கிறது.
மக்களவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன.
இந் நிலையில் குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசத்தில் 16 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 15, மேற்கு வங்கத்தில் 14, கர்நாடகத்தில் 11, பிகாரில் 11, மகாராஷ்டிராவில் 10 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீர், சிக்கிம், தத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி உள்பட மொத்தம் 107 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடக்கிறது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பாஜக தலைவர் அத்வானி உள்பட 1,567 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தல் முடிந்தால் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 372 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து விடும்.
இந் நிலையில் இந்தத் தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்துவிட்டது.
முந்தைய இரண்டு கட்ட வாக்குப் பதிவிலும் சராசரியாக 45 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மே 13-தமிழகத்தில் விடுமுறை:
இதற்கிடையே தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடக்கும் மே 13, புதன்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த உத்தரவை நிதித்துறை முதன்மை செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.
ஊழியர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு?:
இதற்கிடையே தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, அசம்பாவிதம் காரணமாக அரசு ஊழியர்கள் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு, தமிழக அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் எனத் தெரிகிறது.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களில் பலருக்கும் கழிப்பறை வசதி கூட கிடைப்பதில்லை என்பதும், இதனால் ஊழியர்கள், குறிப்பாக பெண்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications