ஸ்ரீரங்கம் ஜீயர் மாயமான வழக்கு-சிபிசிஐடி விசாரிக்கும்
மதுரை: ஸ்ரீரங்கம் ஜீயர் மாயமான வழக்கில் போலீசார் மிகவும் மெத்தமனமாக விசாரணை மேற்கொண்டுள்ளதாகக்ஸ கூறி இந்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பாலகாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடத்தின் தலைமை ஜீயராக இருப்பவர் லட்சுமண ராமானுஜ ஜீயர்.
இவரை கடந்த பிப்ரிவரி 20ஆம் தேதி முதல் காணவில்லை எனவும், அவரது பணிகளை பத்ரிநாராயணன் என்பவர் செய்து வருகிறார் என்ரும் சென்னை வில்லிவாக்கத்தை கோவிந்த ராமானுஜ தாசர் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஹேபியஸ் ஹார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மேலும், அவர் ஜீயரை மிரட்டி தனது பெயரில் மடத்தின் பவர் ஆப் அட்டார்னியை வாங்கி கொண்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த ஸ்ரீரங்கம் போலீசார், ஜீயர் தனது சொந்த ஊரான கொல்கத்தாவில் இருப்பதாகவும், குற்றசாட்டப்பட்டுள்ள பத்ரிநாராயணன் ஜீயரின் வளர்ப்பு மகளின் கணவர் எனவும் தெரிவி்த்துள்ளனர்.
ஆனால், அவர்கள் ஜீயரை கண்டுபிடித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆஜர்படுத்தவில்லை. இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் சொக்கலிங்கம், மாலா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்களது தீர்ப்பில்,
ஜீயரை, பத்ரிநாராயணன் மிரட்டி உயில் எழுதி வாங்கி உள்ளதாக மனுதாரர் கூறி உள்ளார். ஆனால் பத்ரிநாராயணன், ஜீயர் தனது வளர்ப்பு மகளை தனக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாகவும், மருமகன் என்ற பெயரில் சொத்துக்களை தனக்கு எழுதி வைத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜீயர் இருந்தது மடம் அல்ல. அது வீடு என்றும் அவர் கூறுகிறார். ஆனால் ஆவணங்களில் மடம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்ரிநாராயணன் சாதாரண உடையில் இந்த நீதிமன்றத்துக்கு வந்துள்ளார். வயதானபிறகு மடாதிபதி ஆகி காவி வேட்டி அணிந்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள கருத்துக்களில் பல முரண்பாடுகள் உள்ளது. ஜீயர் மாயமான விவகாரத்தில் பத்ரிநாராயணன் மட்டுமல்ல மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.
தனிபடை அமைத்து விசாரிக்க வேண்டும்...
எனவே இந்த வழக்கை நேர்மையான முறையில் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. போலீஸ் டிஜிபி சிபிசிஐடி தனிப்படையை அமைத்து ஜீயர் மாயமானது குறித்து விசாரிக்க வேண்டும்.
மேலும் கண்டுபிடித்து உயர் நீதிமன்ற கிளையில் அவரை ஆஜர்படுத்த வேண்டும். ஜீயர் மாயமானது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு 45 நாட்கள் ஆனபின்பும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்த நீதிமன்றம் உத்தரவிட்டே பின்பே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயல் ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர், உதவி போலீஸ் கமிஷனர் ஆகியோரின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications