ராஜீவ் கொலை: பிரபாகரன்-பொட்டு அம்மன் திட்டமிட்டனர்-கருணா

Subscribe to Oneindia Tamil

Karuna
கொழும்பு: ராஜீ்வ் காந்தியை கொலை செய்யும் சதித் திட்டத்தை யாரிடமும் சொல்லாமல் பிரபாகரனும், பொட்டு அம்மனும் மட்டுமே தீட்டினர் என்று கூறியுள்ளார் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விரட்டப்பட்டு, அரசுக்கு சாதகமாக மாறி இப்போது அமைச்சராகவும் ஆகியுள்ள கருணா.

2004ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகினார் கருணா. அதன் பின்னர் ராணுவத்தோடு கை கோர்த்து கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை வட பகுதிக்கு ஒதுக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார்.

இடையில் இங்கிலாந்துக்குத் தப்பிப் போய் அங்கு கைதாகி சிறைவாசம் அனுபவித்து மீண்டும் இலங்கைக்கு பத்திரமாக வந்து சேர்ந்தவர். புலிகளுக்கு எதிராக பல முக்கிய துப்புகளைக் கொடுத்து காட்டிக் கொடுத்ததால் அதற்குப் பாராட்டாக எம்.பி. பதவி வழங்கப்பட்டார். பின்னர் அமைச்சராகவும் ஆகி விட்டார்.

இந்த நிலையில் பிரபாகரன் குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளார் கருணா.

இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வே சரியானதாகும் என பலமுறை பிரபாகரனிடம் கூறி வந்தேன். ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை.

இதுதொடர்பாக அவருக்குப் பல கடிதங்களை எழுதினேன். ஒருமுறை நான் எழுதிய கடிதத்தை பிரபாகரன் கிழித்துப் போட்டு விட்டார்.

அதேபோல ராஜீவ் காந்தியைக் கொலை செய்யும் சதித் திட்டத்தை தீட்டியவர் பிரபாகரன்தான். அவருக்கும், பொட்டு அம்மானுக்கும் மட்டுமே இது குறித்து தெரியும். வேறு யாரையும் நம்பாமல் இருவரும் மட்டுமே சேர்ந்து இதைத் தீட்டினர்.

ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளை நான் தொடர்ந்து எதிர்த்து வந்தேன். நார்வே தூதுக் குழுவின் முயற்சியால் நடந்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் படிப்படியாக சிதைந்து வந்ததை நான் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பிரபாகரனின் ஒத்துழைப்பு இல்லாததால்தான் பேச்சுவார்த்தை சீர்குலைந்தது. அரசியல் ரீதியாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்ற கருத்தை பிரபாகரன் ஒருபோதும் ஏற்கவில்லை.

மறைந்த ஆன்டன் பாலசிங்கம் கூட பேச்சுவார்த்தைக்கு விருப்பமாக இருந்தார். ஆனால் பிரபாகரன்தான் அதை எதிர்த்து வந்தார் என்று கூறியுள்ளார் கருணா.

பிரபாகரன் குறித்த இத்தனை தகவல்களையும் இது நாள் வரை கூறாமல் இருந்து வந்த கருணா, தற்போது விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டு விட்ட நிலையில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களைக் கொல்வது புலிகள்தான்.. தயா மாஸ்டர்

இதற்கிடையே, ராணுவத்திடம் சரணடைந்த தயா மாஸ்டர் விடுதலைப் புலிகள்தான் தப்பிச் செல்லும் அப்பாவித் தமிழர்களைக் கொல்வதாக கூறியுள்ளாராம்.

அவரும், இன்னொரு புலி இயக்க பிரமுகரான ஜார்ஜும் ராணுவத்திடம் இத்தகவல்களைத் தெரிவித்துள்ளனராம்.

ராணுவத்தின் பிடியில் உள்ள தயா மாஸ்டர் இலங்கை தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்,

அப்பாவி தமிழர்களை இன்னமும் பணயக் கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளனர். தங்கள் வசம் உள்ள பகுதிகளில் இருந்து அவர்களை தப்பிச் செல்ல விடுவதில்லை. தப்பிச் செல்ல முயற்சித்தால் அவர்களை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொல்கின்றனர்.

சுதந்திராபுரம் பகுதியில் இது போன்று தான் நடந்தது. ஒரு பகுதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் விடுதலைப்புலிகளால் உயிரிழந்தனர்.

கடந்த 2006-ம் ஆண்டில் அமைதி ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் முறித்த போதே அங்கிருந்து வெளியேற முடிவு செய்தேன். ஆனால், எனது முயற்சிகள் வெற்றிபெறவில்லை. பேச்சுவார்த்தையில் தான் எனக்கு நம்பிக்கை உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 சதுர கி.மீ. பகுதி மட்டுமே விடுதலைப்புலிகளிடம் இருக்கிறது. அங்கு 1994, 1995, 1996 ஆண்டுகளில் பிறந்த 14 மற்றும் 15 வயது சிறுவர்களையும் வலுக் கட்டாயமாக படைகளில் சேர்க்கின்றனர். குடும்பத்துக்கு ஒரே குழந்தையாக இருந்தால் கூட விட்டு வைப்பதில்லை.

சுகமில்லாமல், இருதய கோளாறுடன் இருப்பவர்களையும் விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்க்கின்றனர். மறுத்தால், அவர்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது. எனக்கு வயதாகி விட்டதால் ஓடி வர முடியவில்லை.

எனினும் விடுதலைப்புலிகளிடம் இருந்து ஏராளமான மக்கள் தப்பியோடி வரும்போது அந்த வாய்ப்பை பயன்படுத்தி நானும் அந்த மக்களுடனேயே சேர்ந்து தப்பி வந்தேன் என்றார் தயா மாஸ்டர்.

புலிகளின் 6 படகுகள் மூழ்கடிப்பு

இந்த நிலையில், ரெட்டைவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் 6 படகுகளை மூழ்கடித்து விட்டதாகவும், அதில் 25 புலிகள் உயிரிழந்ததாகவும் கடற்படை கூறியுள்ளது.

நேற்று காலை 6 படகுகள் வேகமாக கடலுக்குள் வந்தன. அவற்றை இலங்கை போர் கப்பல்கள் கண்டு பிடித்தன. உடனே அந்த படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 6 படகுகளும் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டன.

இது குறித்து கடற்படை கூறுகையில், இலங்கை போர் கப்பல்களை நோக்கி விடுதலைப்புலிகளின் 6 படகுகள் வந்தன. அவற்றில் 4 படகுகளில் வெடி பொருட்கள் இருந்ததால், அவை தற்கொலை படகுகள் என்று கருதப்படுகிறது.

அவற்றுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக மற்ற இரண்டு படகுகள் வந்தன. எனினும், அவை அனைத்தும் மூழ்கடிக்கப்பட்டன. அவற்றில் இருந்த 25 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

ரெட்டைவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு அரணை ராணுவம் நேற்று கைப்பற்றியது. இரு தரப்புக்கும் இடையே பல மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் 9 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும், 200 மீட்ட நீளமுள்ள பாதுகாப்பு அரணை கைப்பற்றியதாகவும் ராணுவம் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து வலையன்மாடன் என்ற பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+