குஜராத் கலவர வழக்கு-விரைந்து விசாரி்க்க உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Narendra Modi
டெல்லி: குஜராத் கலவர வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், அதற்காக 6 அதிவேக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதே நேரத்தில் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற மறுத்துவிட்டது. கடந்த 2002ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தக் கலவரம் குறித்து விசாரிக்க முன்னாள் சிபிஐ இயக்குனர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை நீதிமன்றம் அமைத்தது. 2008ம் ஆண்டு மார்ச் மாதம் அமைக்கப்பட்ட இந்தக் குழு விசாரணையை துவக்கி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறது.

இந் நிலையில் மதக் கலவரத்தல் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு குறித்தும் விசாரிக்குமாறு இந்தக் குழுவுக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே நீதிபதி அரிஜித் பசயாத், நீதிபதி அசோக் குமார் கங்குலி ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச், இந்த வழக்கின் விசாரணையை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவி்ல்.

குஜராத் கலவரத்தை விசாரிக்க 6 அதிவேக நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அவை அகமாதபாத்தில் உள்ள நரோடா பாடியா, நரோடா காம், குல்பர்க், பகுதிகளிலும், மெக்சனா, சமர்கந்தா, ஆன்ந்த் மற்றும் சபர்மதி ஆகியி பகுதிகளில் அமைக்கப்பட வேண்டும்.

இந்த வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டுள்ளது. கலவரம் நடந்து 7 ஆண்டுகள் முடிந்துவிட்டதால் ஒவ்வொரு நாளும் நடந்தவற்றை கவனமாகவும், முழுமையாகவும் விசாரிக்க வேண்டும். அந்த நீதிமன்றங்கள் சிறப்பு புலனாய்வு குழுவின் பரிந்துரையை உற்று நோக்க வேண்டும்.

சாட்சிகளுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்கள் யாராலும் மிரட்டப்படுவதை தடுக்க வேண்டும். சாட்சிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போதும், போகும் போதும் கூடுதல் பாதுகாப்பு தர வேண்டும். அவர்களின் இருப்பிடத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். தேவைபட்டால் அவர்களை வேறு மாநிலங்களில் தங்க வைக்கலாம்.

மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு தலைவர் ராகவனின் ஆலோசனையின் பேரில் விசாரணையி்ல அனுபவம் உள்ள வக்கீல்களை பணியில் அமர்த்தலாம். இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு ஏற்ற விடுக்கப்ட்டுள்ள கோரிக்கைகளை ஏற்று கொள்ள முடியாது என்றனர்.

மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு...

இந் நிலையில் குஜராத் கலவரத்தில் முதல்வர் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க பரிந்துரைத்தற்கு கண்டனம் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை மோடி கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+