திண்டுக்கல்லில் டாக்டர் கடத்தல்-மர்மம் நீடிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல டாக்டர் ஒருவர் மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். அவரை கடத்தியது யார், எதற்காக கடத்தினார்கள் போன்ற விவரம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் நகரில் உள்ள பழனி சாலையில் மருத்துவமனை நடத்தி வருபவர் பாஸ்கரன்(70). இவருக்கு வனிதா என்ற மனைவியும், சித்ரா அனிதா என்ற இரு மகள்களும், கணேசன் என்ற மகனும் உள்ளனர்.
இரு மகள்களும் திருமணம் முடிந்து சென்னை மற்றும் மதுரையில் வசிக்கின்றனர். டாக்டரான மகன் கணேசன் தந்தையுடன் மருத்துவமனையை கவனித்து வருகிறார்.
ஏஎம்சி சாலையில் வசித்து வரும் பாஸ்கரன் நகரில் கைராசியான டாக்டர் என பெயர் எடுத்தவர். இதையடுத்து ஊருக்குள் அவருக்கு நல்ல பேரும், மதிப்பும் உள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5.15 மணிக்கு தனது வீட்டில் இருந்து காஸ்மோ பொலிடன் கிளப்புக்கு செல்ல அவர் கிளம்பினார். இதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரது வீட்டுக்கு அருகே வெள்ளை நிற காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை அப்படியை காருக்குள் இழுத்து போட்டு கடத்தியது.
இதையடுத்து பாஸ்கரன் சத்தம்போட்டு அருகிலிருந்தவர்களை காப்பாற்றுமாறு உதவிக்கு அழைத்தார். அவரது அபாய ஒலி கேட்ட அவரது வீட்டு வாட்ச்மேன், அந்த பக்கமாக வந்த கிளப் நிர்வாகி ராஜா ஆகியோர் ஓடி வந்தனர்.
ஆனால், அதற்குள் அந்த மர்ம கும்பல் காரில் பாஸ்கரனுடன் அந்த இடத்தை விட்டு மின்னல் வேகத்தில் எஸ்.பி. அலுவலகம் வழியாக சென்று மறைந்தது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அவரது குடும்பத்தினரிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த மர்ம கும்பல் பணம் பறிக்கும் நோக்கத்துடன் அவரை கடத்தியிருக்கலாம் என்றும், அவர்களிடம் இருந்த போன் வந்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர்.
மேலும் அந்த மர்ம கும்பலை கண்டுபிடிக்க திண்டுக்கல் போலீஸ் டிஐஜி அமரேஷ்பூஜாரி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர வேட்டையில் களமிறங்கியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications