மகாராஷ்டிராவில் 1200 பன்றிகள் மர்ம சாவு - ஸ்வைன் காரணமா என பீதி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் 1200 பன்றிகள், 500 கோழிகள், 150 ஆடுகள் கண்டுபிடிக்க முடியாத கொடிய நோய் ஒன்றுக்கு பலியாகி உள்ளது. உலகம் முழுவதும் ஸ்வைன் ப்ளூ மிரட்டி வரும் நிலையில் இது மகாராஷ்டிராவில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மகாராஷ்டிராவில் ஜல்கோன் மாவட்டத்தில் தாகிவாத் என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 10 நாட்களுக்காக திடீர் திடீரென்று கூட்டம் கூட்டமாக பன்றிகளும், ஆடுகளும் செத்து விழுந்தன. நேற்று வரை அங்கு 1200 பன்றிகளும், 150 ஆடுகளும் இறந்துள்ளதாக தெரிகிறது.
அந்த கிராமத்துக்கு அருகிலுள்ள கேட்கோன் கிராமத்தில் 500 கோழிகள் காய்ச்சல் வந்து இறந்துள்ளன. மெக்சிகோ, அமெரிக்கா என உலகம் முழுமைக்கும் சுமார் 15 நாடுகளில் ஸ்வைன் ப்ளூ பரவியுள்ள நிலையில் பன்றிகளும், ஆடுகளும், கோழிகளும் பலியானது மகாராஷ்டிராவை பீதிக்குள்ளாக்கியுள்ளது.
ஆனால், இந்த வளர்ப்பு விலங்குகளின் மரணத்துக்கு அகோர வெயில் தான் காரணம் என அம்மாவட்ட சுகாதார துறை அலுவலர் ஸ்ரீசத் என்பவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், சமீபகாலமாக மகாராஷ்டிராவில் வெயில் சுட்டெரிக்கிறது. ஜல்கோன் மாவட்டத்தில் 47.5 டிகிரி செல்சியஸ் வெயில் உள்ளது. இதன் காரணமாக தான் பன்றிகள் இறந்துள்ளன என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications