விடுதலைப் புலிகளின் திடீர் தாக்குதலில் 150 சிங்கள வீரர்கள் பலி
முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டம் ரெட்டை வாய்க்கால் என்ற இடத்தில் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 150 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
புதுக்குடியிருப்புக்கு கிழக்கே உள்ளது ரெட்டை வாய்ககால். இப்பகுதியில் புலிகளின் அரண்களைத் தடுத்து உள்ளே புக ராணுவம் முயற்சித்து வருகிறது. ஆனால் இதை விடுதலைப் புலிகள் கடுமையாக எதிர்த்துப் போரிட்டு வருகின்றனர்.
இந்தப் பகுதி தவிர தரைவழியாக மூன்று முனைகளில் முன்னேறுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ள படையினர், முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையின் தாக்குதல்கள் மூலம் உள்ளே புக முயன்று வருகின்றனர்.
ரெட்டை வாய்க்கால் பகுதியில், வெள்ளிக்கிழமை காலை வரை பத்து முறை இலங்கைப் படைகள் முன்னேற முயற்சித்தனர்.
ஆனால் விடுதலைப் புலிகள் இதை கடுமையாக எதிர்த்து தாக்குதல் நடத்தி வந்தனர்.
இதில் ராணுவத்திற்கு கடும் பாதிப்பும், சேதமும் ஏற்பட்டது. 150 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முதல் வன்னி போர் முனையில் விடுதலைப் புலிகள் ஏழு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ரெட்டைவாய்க்கால் பகுதியிலும் ராணுவ டிரக் ஒன்றை, கரும்புலிகள் படையைச் சேர்ந்தவர்கள் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி பெரும் இழப்பை ஏற்படுத்தினர்.
ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டும் 600 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications