Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை ராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் 64 நோயாளிகள் பலி

Subscribe to Oneindia Tamil

Damaged makeshift Hospital
முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவம் இன்று இருமுறை தற்காலிக மருத்துவமனை ஒன்றின் மீது நடத்திய பயங்கர எறிகணைத் தாக்குதலில் 64 அப்பாவி தமிழ் நோயாளிகள் உயிரிழந்தனர். அந்த மருத்துவமனையும் தகர்ந்து போனது.

அப்பாவி மக்களைக் கொல்ல மாட்டோம் என இலங்கை அரசு கூறி வந்தபோதிலும் தொடர்ந்து அவர்களை இலங்கைப் படைகள் கொன்று குவித்துக் கொண்டுதான் உள்ளன.

இந்த நிலையில் இன்று நடந்த பயங்கரத் தாக்குதலில் சிகிச்சை பெற்று வந்த அப்பாவி நோயாளிகள் 64 பேர் உயிரிழந்தனர்.

இன்று காலை 9 மணியளவில் முள்ளிவாய்க்காலில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது இலங்கைப் படைகள் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தின.

அந்த தாக்குதலில் 23 பேர் பலியானார்கள். 53 பேர் படுகாயமடைந்தனர்.

பின்னர் மீண்டும் 10.30 மணிக்கு எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 41 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு முன்பாக ஆளில்லாத விமானம் ஒன்று இப்பகுதியை வட்டமிட்டுச் சென்றது. அதன் பின்னரே இங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கொடும் தாக்குகதலில் ஒரு பெண் டாக்டர் கொல்லப்பட்டார். 3 மருத்துவமனை ஊழியர்களும் காயமடைந்தனர்.

400க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் மருத்துவமனை ஊழியர்கள் தீவரமாக ஈடுபட்டிருந்த நிலையில் தாக்குதல் நடைபெற்றது.

கட்டடத்தைச் சுற்றிலும் எறிகணைகள் விழுந்து வெடித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+