சுமதியின் மோசடியில் 2 மத்திய அமைச்சர்களுக்குத் தொடர்பு

பாஸ்போர்ட் வழங்குவதில் பெருமளவில் மோசடியில் ஈடுபட்டதாக கைதாகியுள்ள சுமதி ரவிச்சந்திரனை 3 நாள் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்து வருகிறது.
அவர் தவிர சுமதியின் கணவர் ரவிச்சந்திரன், டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜு ஆகியோரையும் சிபிஐ அதிகாரிகள் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதில் பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமதியிடம் மட்டும் 100 கேள்விகளை அதிகாரிகள் கேட்டு பதில்களை வாங்கியுள்ளனர்.
இந்த விசாரணையின்போது, சுமதிக்கும், மத்திய அமைச்சர்கள் இருவர், சில உயர் அதிகாரிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இருப்பினும் வலுவான ஆதாரங்கள் கிடைத்தால் மட்டுமே மத்திய அமைச்சர்களிடம் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாம்.
சுமதி வழங்கிய அனைத்து பாஸ்போர்ட்களையும், குறிப்பாக தத்கல் திட்டத்தின் கீழ் வழங்கிய பாஸ்போர்ட்களை சிபிஐ ஆராய்ந்து வருகிறது.
பல பாஸ்போர்ட்கள் போலியான முகவரிகளைக் கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. அதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் சரமாரியாக கேள்விக்கு கேட்டுள்ளனர்.
சுமதி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும், அவரது சொத்து விவரங்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து தகவல் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சஸ்பெண்ட்டா...
இதற்கிடையே சுமதி ரவிச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளாரா, இல்லையா என்பதில் குழப்பம் நிலவுகிறது. அதுகுறித்து சிபிஐக்கு இதுவரை எந்தத் தகவலும் இல்லையாம்.
அதேசமயம், சுமதியின் கணவரான டாக்டர் ரவிச்சந்திரனை சென்னை மாநகராட்சி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அவர் மாநகராட்சி டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications