பண பட்டுவாடா-திமுக பிரமுகரை கையும் களவுமாக பிடித்த அதிமுகவினர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு கவர்களில் பணம் போட்டு பட்டுவாடா செய்த திமுக பிரமுகரை, அதிமுகவினர் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
தூத்துக்குடி அருகேயுள்ள தட்டம்பாறை பகுதிகளான கொல்லம் பருப்பு, செட்டியூரணி பகுதிகளில் திமுகவினர் ஓட்டுக்காக வாக்களர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக அதி்முகவினருக்கு தகவல்கள் வந்தன. அதிமுக நிர்வாகிகள் அங்கு விரைந்தனர்.
அங்கு சென்ற அதிமுகவினர் வாக்களர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த திமுக பிரமுகரை பணத்துடன் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை தட்டம்பாறை போலீசில் ஓப்படைத்தனர்.
விசாரணையில் பணம் கொடுத்து கொண்டிருந்தவர் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்த ஆட்டோ கோபால் என்பது தெரிய வந்தது. இவரது மனைவி ராமலெட்சுமி திமுக ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 26 கவர்களில் 200 ரூபாய் வீதம் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்து 200 ரூபாயும் தட்டபாறை போலீஸ் நிலையத்தில் ஓப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தட்டம்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், வேட்பாளர் சிந்தியா பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் மற்றும் அதிமுக பிரமுகர்கள் தூத்துக்குடி எஸ்.பியிடம் புகார் கொடுத்தனர்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications