பஸ் கட்டணக் குறைப்பு விதி மீறல்: தேர்தல் ஆணையம்- விளக்கமளிக்க விரைகிறார் ஸ்ரீபதி
டெல்லி: தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது தேர்தல் விதிமீறல். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லி விரைகிறார்.
தமிழகத்தில் ஏகப்பட்ட விசேஷ பெயர்களில் ஓடிக் கொண்டிருக்கும் பஸ்களில் இருந்து வந்த கட்டணங்களைக் குறைத்து சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது.
இது அப்பட்டமான தேர்தல் விதி மீறல், அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியிருந்தார்.
இது பற்றி மத்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறோம் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பஸ் கட்டணங்களைக் கூட்டவும் இல்லை, குறைக்கவும் இல்லை. அதிமுக ஆட்சிக்காலத்து கட்டணங்கள்தான் வசூலிக்கப்படுகின்றன என்று போக்குவரத்து அமைச்சர் கே.என். நேரு விளக்கமளித்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் ஸ்ரீபதிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஸ்ரீபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானதாக கருதுகிறோம். எனவே இதுகுறித்து நேரில் வந்து விளக்கம் தர வேண்டும் என தேர்தல் ஆணையம் ஸ்ரீபதிக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து இன்று டெல்லி செல்கிறார் ஸ்ரீபதி.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications