இலங்கைக்கு ஆயுதம்: பொய் பிரசாரம் செய்தால் நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை
சென்னை: இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்புவதாக பொய் பிரசாரம் செய்து கலகம் ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை..
ஹைதராபாத்தில் ராணுவ பயிற்சியை முடித்துவிட்டு மதுக்கரை ராணுவ முகாமுக்கு சில ராணுவ வீரர்களின் உடைமைகள் மற்றும் பயிற்சி உபகரணங்களுடன் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது இந்திய அரசு வாகனங்களில், இலங்கை ராணுவத்தினருக்கு ஆயுதங்களை கொச்சி வழியாக அனுப்புவதாக, பெரியார் திராவிட கழகத்தினர் பொய் பிரசாரம் செய்துள்ளனர்.
அவர்கள் சுமார் 100 பேர் புறவழிச்சாலை கோவைப்பிரிவு அருகில் மாலை 3.45 மணிக்கு ராணுவ வாகனங்களை வழிமறித்து, கண்ணாடிகளை சேதப்படுத்தியும், வாகனங்களில் இருந்து ஓட்டுநரின் உடைகள், கூடாரத் துணிகள், பிளாஸ்டிக் நாற்காலிகள் போன்றவற்றை எடுத்து வெளியில் போட்டு தீ வைத்துள்ளனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை விரட்டி அயடித்ததோடு, மேற்கொண்டு அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பெரியார் திராவிட கழக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவையற்ற பொய் பிரசாரம் செய்து, கலகம் விளைவிக்கும் நோக்கத்துடன் ராணுவ வாகனங்களை தாக்கி சேதப்படுத்த தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது போன்று பொய்யான வதந்திகளை பரப்புவோர் மீதும், அதன் பேரில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications