ஈழ ஆதரவு அரசியல் தற்கொலை- ஜெ.க்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை
மதுரை: சுதந்திர தமிழ் ஈழம் அமைவது சாத்தியமற்றது. விடுதலை புலிகளின் ஆதரவு சக்திகளோடு சேர்ந்து கொண்டு ஜெயலலிதா அரசியல் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
எந்த அணியிலும் சாமியை சேர்க்கவில்லை. பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த சாமி, யாரும் அழைக்காமலேயே பாஜகவுடன் போய் ஒட்டிக் கொண்டார். இவரது கட்சியும் லோக்சபா தேர்தலில் களத்தில் உள்ளது.
இந்நிலையில் சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
அதில்,
இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அளித்த டிவிடியின் அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனி ஈழம் அமைக்க பாடுபடுவேன் என்று கூறி வருகிறார்.
ஆனால் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மறுத்துள்ளார். இலங்கையில் உள்ள அகதி முகாம்கள் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதி முகாம்களை விட மிகவும் நன்றாக உள்ளன என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.
எனவே ஜெயலலிதா சாத்தியமற்ற தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான தேசப்பற்று மிகுந்த கொள்கைகளுக்கு அவர் மீண்டும் திரும்ப வேண்டும். இப்படி அவர் செய்தால் அவருடைய புகழ் மேலும் கூடுமே தவிர குறையாது.
தன்னை சுற்றியுள்ள புலிகளின் ஆதரவு சக்திகளோடு சேர்ந்து கொண்டு அவர் அரசியலில் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்றார் சுப்பிரமணியசாமி.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications