கருணாநிதி போன பின் வந்த ஜெ.- நேருக்கு நேர் தவிர்ப்பு
சென்னை: தமிழக அரசியலின் இரு பெரும் துருவங்களான முதல்வர் கருணாநிதியும், அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளும் சூழ்நிலை சென்னை விமான நிலையத்தில் உருவானது. இருப்பினும் கருணாநிதி கிளம்பிய பின்பு ஜெ தாமதாக வந்ததால் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம் தவிர்க்கப்பட்டு விட்டது.
திருச்சியில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்துவிட்டு நேற்று முதல்வர் பகல் 12.10 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில் விமானம் சிறிது நேரம் தாமதமானதால் பகல் 1.25 மணிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதே நேரத்தில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா சென்னையில் இருந்து கோவைக்கு பகல் 2 மணிக்கு தனது ஹெலிகாப்டரில் பயணம் செய்யவிருப்பது தெரியவந்தது.
இருவரும் தமிழகத்தின் முக முக்கியமானவர்கள் என்பதால் விஐபிக்களுக்கான விமான நிலைய வாயில் 1ல் இரு கட்சியினரும் கூட்டமாக காத்திருந்தனர். இதனால் அங்கு லேசான பரபரப்பு காணப்பட்டது. மேலும் இரு தலைவர்களும் விமான நிலையத்தில் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு உருவானது.
இந்நிலையில் கருணாநிதி வந்த விமானம் தரையிறங்கியது. அதிலிருந்து இறங்கிய கருணாநிதி 1.35 மணிக்கு விமான நிலையத்திலிருந்து வெளியேறினார். அவர் செல்லும் வரை ஜெயலலிதா வரவில்லை. இதையடுத்து இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்வது தவிர்க்கப்பட்டது.
கருணாநிதி சென்ற பின் ஐந்து நிமிடங்கள் கழித்து ஜெயலலிதா 1.40 மணிக்கு விமான நிலையத்துக்கு வந்து கோவை சென்றார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications