சரத்குமாரை தடுத்த திமுகவினர் - கார் மீது தாக்குதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை திமுகவினர் தடுத்து நிறுத்தி ரகளை செய்தனர். அப்போது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் கராத்தே சரவணனை ஆதரித்து சரத்குமார் நேற்று 2-வது நாளாக பிரசாரம் செய்தார்.
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு 3.50 மணி அளவில் முத்தையாபுரம் வந்தார்.
அங்குள்ள தோப்புதெருவில் சரத்குமார் திறந்த வேனில் ஆதரவு கேட்டு சென்றார். அப்போது அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தி.மு.க. கூட்டணி தேர்தல் அலுவலகத்தில் இருந்து வந்த சிலர் தி.மு.க. கொடியுடன் வந்து வழிமறித்தனர்.
உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்சினை? நான் மக்களை சந்தித்து ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். ஆதரவு கேட்டுவிட்டு சென்று விடுவேன் என்று அவர்களிடம் சரத்குமார் கூறினர். இதையடுத்து வழிமறித்த திமுகவினர் விலகினர்.
அப்போது சரத்குமாரின் காருக்கு பின்னால் 3-வதாக வந்து கொண்டிருந்த நகர துணைச் செயலாளர் விஜயகுமார் காரின் பின்புறக் கண்ணாடியை உருட்டுக்கட்டையால் ஒரு கும்பல் தாக்கியது. இதில் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
இதைத் தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சியினர் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் மீது புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் விருதுநகர் தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக் மீது செங்கல் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சரத்குமாரின் காரை தடுத்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications