காங்கிரசுக்கு ஆதரவே தர மாட்டோம்-இந்திய கம்யூ.
தென்காசி: இனி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, அதன் ஆதரவோடு அமையும் ஆட்சிக்குக் கூட ஒருபோதும் இடதுசாரிகள் ஆதரவு தர மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறினார்.
அக் கட்சியின் தென்காசி தொகுதி வேட்பாளர் லிங்கத்தை ஆதரித்து ராஜா பிரச்சாரம் செய்தார். பின்னர் குற்றாலத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைய வேண்டும். அதுபோல மதவெறி கொண்ட பாஜகவும் ஆட்சிக்கு வரக் கூடாது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் உள்ள அணி மாபெரும் வெற்றி பெரும் என்று தெரிகிறது. இக் கூட்டணிக்கு பெரும் ஆதரவு அலை வீசுகிறது.
காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு தமிழகமெங்கும் எதிர்ப்பு அலை வீசுகிறது. ஒரு புறம் ஆதரவு அலை, மறுபுறம் எதிர்ப்பு அலை.
மாற்று அணி எங்கே இருக்கிறது என்று கேட்கும் காங்கிரசும் பாஜகவும் இப்போது அச்சத்தில் உள்ளனர். மாற்று அணி குறித்து பயமில்லை எனில் அதுபற்றி பேசவே வேண்டாமே.
அகில இந்திய அளவில் எங்கள் அணி மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இடதுசாரிகள் ஆதரவு வேண்டும். அதே சமயம் அணுசக்தி ஓப்பந்தத்தை கைவிடமாட்டார்களாம். இனி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, அதன் ஆதரவோடு அமையும் ஆட்சிக்குக் கூட இடதுசாரிகள் ஒருபோதும் ஆதரவு தர மாட்டோம்.
மதுரை தொகுதியில் முதல்வர் மகன் என்ற மாமதையில் அழகிரி போட்டியிடுகிறார். மதுரை மக்கள் எதற்கும் பணியாதவர்கள். மதுரை அரசியலில் விழிப்புணர்வு பெற்ற மக்கள் நிறைந்த தொகுதி அது. அங்கு மார்க்சிஸ்ட் வேட்பாளர் நிச்சயம் வெல்வார் என்றார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications