'தம்' அடி இல்ல... தண்டனை-சீன அரசு வினோத உத்தரவு

புகை பிடிப்பது உடலுக்கு கேடு என நம்மூரில் தடை கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால், நமது அண்டை நாடான சீனாவில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.
மத்திய சீன பகுதியில் ஹூபை மாகாணத்தி்ல் உள்ள கோங் ஆன் என்ற கவுண்டி அரசு அங்கிருக்கும் அரசு ஊழியர்களை ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2.3 லட்சம் சிகரெட் பாக்கெட்டுகளை ஊதித்தள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்கள் ஹூபை மாகாண சிகரெட்டுகளை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது.
இதில் என்ன கொடுமை என்றால் ஒவ்வொரு துறையை சார்ந்தவர்களும் இவ்வளவு சிகரெட் பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி குறைவாக சிகரெட் பிடிக்கும் துறை மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவின் மூலம் அங்கு பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும் என அந்த அரசு நம்புவதாக தெரிகிறது. இது குறித்து கோங் ஆன் சிகரெட் சந்தையின் மேற்பார்வையாளர் சென் நியான்சு கூறுகையில், சிகரெட் வரி மூலம் கிடைக்கும் பணத்தால் பொருளாதாரம் உயரும். இதன்மூலம் உள்ளூர் சிகெரட் கம்பெனிகாரர்கள் நலிவடையமாட்டார்கள் என்றார் அவர்.
ஏற்கனவே சீனாவில் 35 கோடி பேருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது. புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகளை விளக்க வேண்டிய ஆண் டாக்டர்களில் பாதிக்கு மேல் இந்த பழக்கத்துக்கு அடிமையானவர்கள். மேலும் புகை பிடிப்பதன் காரணமாக ஒரு ஆண்டில் மரணமடைவர்களின் எண்ணிக்கை 10 லட்சம்.
தற்போது ஹூபை மாகாண அரசின் வினோத உத்தரவால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications