முகமடி அணிந்து பிரசாரம் செய்யும் பாஜக வேட்பாளர் தமிழிசை

தமிழிசை ஒரு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவனும், அதிமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியனும், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் அனைத்து கட்சிகாரர்களும் தற்போது வட சென்னையில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த சமயத்தில் இன்று பாஜகவினர் வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்தனர்.
தமிழிசை சவுந்தரராஜன் உட்பட 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கொருக்குபேட்டையில் இன்று உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு முகமுடி அணிந்து பிரசாரம் செய்தனர்.
அப்போது தமிழிசை கூறுகையில்,
வடசென்னையில் குப்பைகள் எரிக்கப்படுவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களாலும் காற்று அதிகம் மாசுபட்டுவிட்டது. இதனால் இப்பகுதி மக்களை ஆஸ்துமா தாக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த பிரச்சினையை அதிமுக மற்றும் திமுக அரசுகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. நான் வெற்றி பெற்றால் இந்த பிரச்சினைகளை விரைவில் நீக்குவேன். தொகுதியில் உள்ளவர்கள் நல்ல காற்றை சுவாசிக்க ஆக்ஸிஜன் பார்லர்கள் அமைப்பேன் என்றார் தமிழிசை.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications