எஸ்.எஸ்.சந்திரன் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
நெல்லை: தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் தொடர்ந்து அதிமுகவுக்கு பிரசாரம் செய்த நடிகர் எஸ் எஸ் சந்திரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 13ம் தேதி நடக்கிறது. இதில் அதிமுகவை சேர்ந்த நடிகர் எஸ்எஸ் சந்திரனுக்கு மத்திய சென்னையில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் அங்கு திமுக சார்பில் தயாநிதிமாறன் போட்டியிடுவதால் எஸ்எஸ் சந்திரன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முகமது அலி ஜின்னா களமிறக்கப்பட்டார். தற்போது எஸ்எஸ் சந்திரன் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
நேற்று இரவு அவர் நெல்லை தொகுதி திசையன்விளை பகுதியில் திறந்த வேனில் சென்று பிரச்சாரம் செய்தார். அவர் இரவு 10 மணியை தாண்டி அப்பகுதியில் பிரசாரம் செய்துள்ளார்.
இதையடு்த்து பாதுகாப்பு பணியில் இருந்த திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், எஸ்எஸ் சந்திரனிடம் நேரம் 10.10 ஆகிவிட்டது இதற்கு மேல் பிரச்சாரம் செய்ய கூடாது என கூறியுள்ளார்.
அதற்கு எஸ்எஸ் சந்திரன் மைக் இல்லாமல் பிரச்சாரம் செய்யலாம் என்று கூறினாராம். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எஸ்எஸ் சந்திரன், இன்ஸ்பெக்டரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், எஸ்எஸ் சந்திரனிடம் நீங்கள் இத்துடன் பிரசாரத்தை முடித்து கொள்ள வேண்டும் என்று கூறி விட்டு போலீஸ் நிலையம் சென்றார்.
பின்னர் எஸ்எஸ் சந்திரன் தேர்தல் விதியை மீறி இரவு 10 மணி்க்கு மேல் பிரச்சாரம் செய்ததாகவும், போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications