லட்சக்கணக்கான தொழிலாளர்களை ஒரே இரவில் வீட்டுக்கு அனுப்பிய ஜெ. எப்படி நல்லாட்சி தருவார் - விஜயகாந்த்
சென்னை: ஒரே இரவில் லட்சணக்கணக்கான தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பிய ஜெயலலிதா எப்படி நல்லாட்சியை தருவார்? என்று கேட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தேமுதிக. வேட்பாளர் அருண் சுப்பிரமணியத்தை ஆதரித்து தேமுதிக. தலைவர் விஜயகாந்த் ஆலந்தூரில் திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.
மண்டித்தெருவில் அவர் பேசுகையில், தமிழகத்தை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்து குழிதோண்டி புதைத்து விட்டனர்.
40 தொகுதிகளிலும் தே.மு.தி.க.வை வெற்றி பெற செய்தால், தொழில் பெருக வர்த்தக மையம், தனி மனித வருமானத்தை உருவாக்க தமிழ்நாடு வங்கி ஏற்படுத்தி தொழில் செய்ய ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும்.
பெண்களின் வாழ்க்கையில் முன்னேற மாவட்டந்தோறும் கலைக் கல்லூரி தொடங்கப்படும். கூரை வீடுகளை கல் வீடுகளாக மாற்றி அமைத்து தரப்படும். ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு தேடி வந்து வழங்கப்படும். நல்ல குடிநீர், சாலை வசதிகள் ஏற்படுத்தி தருவேன்.
நான் காசு பணத்திற்கு ஆசைப்படுவன் கிடையாது. மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளேன். தெய்வத்தையும், மக்களை நம்பியும் தேர்தலை சந்திக்கிறேன்.
எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திற்கு பின் மின்சார உற்பத்தியை யாரும் கவனிக்கவில்லை. சாலைகளை மேம்படுத்தியதாக 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுங்க சாவடிகளை அமைத்து பொதுமக்களிடம் ரூ.50 முதல் ரூ.200 வரை கட்டணங்களை பெற்று சாலை புரட்சி என பேசக் கூடாது.
சுயநலம் இல்லாதவர் என ஜெயலலிதா பேசி வருகின்றார். சுயநலம் இல்லாதபோது ஏன் வாஜ்பாய் ஆட்சியை கலைத்தீர்கள்? ஒரே இரவில் லட்சணக்கணக்கான தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பியவர் எப்படி நல்லாட்சியை தருவார்? ஆடு, கோழியை மக்கள் வெட்டக்கூடாது என்று எதிர்த்து விட்டு குருவாயூர் கோவிலுக்கு யானை அளித்தவர் ஜெயலலிதா என்றார் விஜயகாந்த்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications